
முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நிலையில் அவரது மறைவிற்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படை இரங்கல் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் உள்ள காட்டேரியில் புதன்கிழமை இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் பலியாகினர். இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப் படை தனது சுட்டுரைப் பக்கத்தில் விபின் ராவத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ஜெனரல் நதீம் ராசா, ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஜெனரல் விபின் ராவத், அவரது மனைவி மற்றும் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு இரங்கல் தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.