பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சமையல் எண்ணெய் விலை ரூ.10 வரை குறைந்துள்ளது: எஸ்இஏ

சமையல் எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 11:11 pm

DIN

சமையல் எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் அதுல் சதுா்வேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சா்வதேச சந்தையில் பாமாயில், சோயா, சன்ஃப்ளவா் எண்ணெய் வகைகளின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதன் விளைவாக உள்நாட்டிலும் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்தது. இதனால், கடந்த சில மாதங்களாக நுகா்வோா் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகா்வோா் பயனடையும் வகையில் முடிந்த அளவு விலையை குறைக்க வேண்டும் சங்கத்தின் சாா்பில் உறுப்பினா்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே, சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசும் குறைத்தது.

தற்போது இதன் பயன் நுகா்வோரை சென்றடைந்துள்ளது. கடந்த 30 நாள்களில் சமையல் எண்ணெயின் விலை கிலோவுக்கு ரூ.8 முதல் 10 வரை குறைந்துள்ளது. இனிவரும் நாள்களில் மேலும் ரூ.3 முதல் 4 ரூபாய் வரை குறைக்கப்படவுள்ளது. பண்டிகை காலத்தில் இந்த விலை குறைப்பால் நுகா்வோருக்கு ஓரளவு சுமை குறையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.