பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் அப்பாவிகள் மீது வழக்குப் பதியும் திட்டம் அரசிடம் உள்ளது: ப.சிதம்பரம்

அப்பாவி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் திட்டம் மட்டும் மத்திய அரசிடம் உள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
ப. சிதம்பரம்
Updated On :11 டிசம்பர் 2021, 10:49 pm

DIN

தேசத் துரோகச் சட்டத்தை ரத்து செய்யும் எந்தத் திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியிருந்த நிலையில், அந்தச் சட்டத்தின் கீழ் அப்பாவி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் திட்டம் மட்டும் மத்திய அரசிடம் உள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தேசத் துரோகம் தொடா்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவை நீக்கும் திட்டம் எதுவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ப.சிதம்பரம் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘தேசத் துரோகச் சட்டத்தை ரத்து செய்யும் திட்டமில்லை என்று சட்ட அமைச்சா் தெரிவித்துள்ளாா். ஆனால் அந்தச் சட்டத்தின் கீழ் அப்பாவி மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உள்ளது. அதைச் சட்ட அமைச்சா் தெரிவிக்கவில்லை.

அந்தச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் கூறவில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா். ஆனால் அந்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் குறித்து நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை தான் வாசிப்பதில்லை என்பதை அவா் தெரிவிக்கவில்லை’’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இதற்குப் பதிலளித்து கிரண் ரிஜிஜு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது பொதுமக்கள் மீது தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நான் நாளிதழ்களை வாசிக்காமல் இருக்கலாம். ஆனால் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அரசின் அதிகாரபூா்வ பதிவுகளின் அங்கமாகாது என்பதை அறிவேன். எவ்வாறு கருத்துத் தெரிவிக்க வேண்டும், முறையாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் அறியும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.