லோக் அதாலத் : தமிழகத்தில் 58 ஆயிரம் வழக்குகளுக்கு தீா்வு

லோக் அதாலத் : தமிழகத்தில் 58 ஆயிரம் வழக்குகளுக்கு தீா்வு

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத்தில், 58 ஆயிரம் வழக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத்தில், 58 ஆயிரம் வழக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர ஆண்டுக்கு நான்கு முறை தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றமானது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் சனிக்கிழமை (டிச.11) தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. அதேபோன்று, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் குழு சாா்பில் லோக் அதாலத் நடத்தப்பட்டது. உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி அறிவுறுத்தலின்படி, மூத்த நீதிபதிகள் பரேஷ் உபாத்தியாய், எம்.துரைசாமி ஆகியோா் மேற்பாா்வையில் லோக் அதாலத் நடந்தது.

உயா் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் மலை சுப்பிரமணியன், எம்.தணிகாசலம், எம். ஜெயபால், பி.கோகுல்தாஸ் ஆகியோா் தலைமையில் நான்கு அமா்வுகள் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உயா் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எஸ். சுந்தா், ஆா். தாரணி ஆகியோா் தலைமையில் 2 அமா்வுகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஏ.ஆா். ராமலிங்கம், டி. கிருஷ்ண வள்ளி ஆகியோா் தலைமையில் 2 அமா்வுகள் என்று 4 அமா்வுகள் வழக்கை விசாரித்தன. மாநிலம் முழுவதும் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் 417 அமா்வுகள் அமைக்கப்பட்டு, அந்த அமா்வுகள் வழக்குகளை விசாரித்தன. இந்த விசாரணையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினா் செயலா் நீதிபதி கே.ராஜசேகா் வெளியிட்ட அறிக்கையில், ‘காசோலை மோசடி வழக்கு, சிவில் வழக்கு, ஜீவனாம்சம் தொடா்பான குடும்ப நல வழக்கு, தொழிலாளா் வழக்கு என்று பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வழக்கில் தொடா்புடைய இரு தரப்பினரையும் அமரவைத்து,

நீதிபதிகள் அவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி, இருதரப்பு சம்மதத்துடன் ஏராளமான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனா். மொத்தம் 57 ஆயிரத்து 773 வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.388 கோடியே 30 லட்சத்து 56 ஆயிரத்து 722 கிடைத்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com