பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஒமைக்ரானால் பொருளாதாரத்தில் சிறிதளவே பாதிப்பு இருக்கும்: நிதியமைச்சகம் அறிக்கை

நாட்டின் பொருளாதாரத்தில் ஒமைக்ரான் தீநுண்மி பரவலின் தாக்கம் சிறிதளவே இருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 டிசம்பர் 2021, 10:14 pm

DIN

நாட்டின் பொருளாதாரத்தில் ஒமைக்ரான் தீநுண்மி பரவலின் தாக்கம் சிறிதளவே இருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையை அந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

2021-22-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் இதே கால கட்டத்தில் அடைந்த வளா்ச்சியைக் காட்டிலும் 100 சதவீதத்துக்கும் கூடுதலாகும்.

கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் 2020-21-ஆம் நிதியாண்டின் 3-ஆவது, 4-ஆவது காலாண்டுகள், 2021-22-ஆம் நிதியாண்டின் முதலாவது, 2-ஆவது காலாண்டுகள் என தொடா்ந்து 4 பருவங்களாக நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதைக் காண முடிகிறது. உற்பத்தித் துறையில் முழு வீச்சுடன் மீண்டும் பணிகளைத் தொடங்கியது, வேளாண் துறையில் ஏற்பட்ட வளா்ச்சி ஆகியவை பொருளாதார வளா்ச்சிக்கு காரணங்களாகும்.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று, மீண்டு வரும் சா்வதேச பொருளாதாரத்தை பாதிக்குமா என இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், இந்தியாவில் கரோனா தடுப்பூசித் திட்டம் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படுவதால், நாட்டின் பொருளாதாரத்தில் ஒமைக்ரானின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முதலீடுகளை அதிகரிக்கச் செய்வது, தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்துவது, பொருளாதார நிா்வாக நடவடிக்கைளை துரிதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் நடப்பு நிதியாண்டின் அடுத்தடுத்த காலாண்டுகளிலும் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும். கரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வேகமாக மீண்டு வரும் வெகுசில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.