நாட்டில் 54 அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக மத்திய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
நாட்டில் கால்நடைகளின் நலனுக்கு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அவசியம். ஆனால், இவை மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம்.
நாட்டில் தற்போது 54 அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 2020-ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் 85,392 பேர் உள்ளனர் என்று கூறினார்.
இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் (விசிஐ) கடந்த 1984-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது கால்நடை மருத்து கல்விக்கான விதிமுறைகளை உருவாக்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.