இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

எரிபொருள் மீதான வரியால் அரசுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது: நிர்மலா சீதாராமன்

கடந்த மூன்றாண்டுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியால் அரசுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 டிசம்பர் 2021, 6:27 am

DIN

கடந்த மூன்றாண்டுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியால் அரசுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, 2020-21 நிதியாண்டில் அரசுக்கு 3.71 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது என மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, அக்டோபர் 5ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 19.48 ரூபாயாக இருந்தது. இது, 2021ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி, 27.90 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில், டீசல் மீதான கலால் வரி 15.33 ரூபாயிலிருந்து 21.80 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து விவரங்களையும் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில், அதாவது 2018ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி, லிட்டருக்கு 19.48 ரூபாயாக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி, 2019ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் தேதி, 17.98 ரூபாயாக குறைந்தது. அதே நேரத்தில் டீசல் மீதான கலால் வரி 15.33 ரூபாயிலிருந்து 13.83 ஆக குறைக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ஆம் தேதி வரை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி தொடர் ஏறுமுகத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, 31.83 ரூபாயாக இருந்த கலால் வரி 32.98 ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பே, நவம்பர் 4ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரி 27.90 ரூபாயாகவும் டீசல் மீதான கலால் வரி 21.80 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசிய நிர்மலா சீதாராமன், "கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரி உள்பட மத்திய கலால் வரி பின்வருமாறு: 2018-19 நிதியாண்டு, 2,10,282 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. அதேபோல், 2019-20 நிதியாண்டு, 2,19,750 கோடி ரூபாயும் 2020-21 நிதியாண்டு, 3,71,908 ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது" என்றார்.

தீபாவளி முன்பு, நவம்பர் 4ஆம்தான், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.