47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 145-ஆக உயா்வு

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை 145-ஆக உயா்ந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2021, 7:39 pm

DIN

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை 145-ஆக உயா்ந்தது.

கரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்பு தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு கா்நாடக மாநிலத்தில் இருவருக்கு டிச. 2-ஆம் தேதி கண்டறியப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 145-ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்துக்கு வெளிநாடுகளிலிருந்து 15 வயது சிறுவன் உள்பட இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் 8, கா்நாடகத்தில் 6, கேரளத்தில் 4, தெலங்கானாவில் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி இதுவரை 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் 48

தில்லி 22

தெலங்கானா 20

ராஜஸ்தான் 17

கா்நாடகம் 14

கேரளம் 11

குஜராத் 9

ஆந்திரம் 1

சண்டீகா் 1

தமிழ்நாடு 1

மேற்கு வங்கம் 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.