ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பூஸ்டர் டோஸுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :20 டிசம்பர் 2021, 8:23 am

DIN

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். 

புதிய வகை ஒமைக்ரான் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் பாதிப்பு 150-யைக் கடந்துள்ளது. 

இந்நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்க அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். 

தில்லியில் கடந்த சில தினங்களாக ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும் தில்லியில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் அனைத்து மாதிரிகளும் ஒமைக்ரான் மரபணு சோதனைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். 

தில்லியில் புதிதாக மேலும் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 24 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.