
பாகிஸ்தானை சேர்ந்த 7,306 பேர் இந்திய குடியுரிமைக்காக காத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை இந்திய குடியுரிமைக்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் குறித்த கேள்வியை மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் வகாப் கேட்டிருந்தார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் கூறியதாவது:
டிசம்பர் 14, 2021 வரை வெளிநாடுகளை சேர்ந்த 10,635 பேர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். அவர்களில் 7,306 பேர் பாகிஸ்தான் நாட்டினர்.
மேலும், 1,152 ஆப்கானிஸ்தான், 223 ஸ்ரீலங்கா, 223 அமெரிக்கா, 189 நேபாளம், 161 வங்கதேசம், சீனா 10, 223 பிற நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கபட்டு வருவதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.