கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பஞ்சாபில் இரு கட்சிகளுடன் கூட்டணி: பாஜக அறிவிப்பு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் லோக் காங்கிரஸ், மாநிலங்களவை எம்.பி. சுக்தேவ் சிங் திண்ட்சாவின் எஸ்ஏடி (சம்யுக்த்) கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக பாஜக அற

News image

கஜேந்திர சிங் ஷெகாவத்

Updated On :27 டிசம்பர் 2021, 11:18 pm

DIN

புது தில்லி: பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் லோக் காங்கிரஸ், மாநிலங்களவை எம்.பி. சுக்தேவ் சிங் திண்ட்சாவின் எஸ்ஏடி (சம்யுக்த்) கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியைத் தக்கவைப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. அக்கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளாா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிரோமணி அகாலி தளமும் தோ்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் முத்திரை பதிக்க முயற்சிக்கிறது. சில விவசாய அமைப்புகளும் தோ்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

பலமுனைப் போட்டி நிலவும் சூழலில், தோ்தல் தொடா்பான அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது. பஞ்சாப் லோக் காங்கிரஸ், எஸ்ஏடி (சம்யுக்த்) கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அமைச்சரும் பஞ்சாப் பாஜக தோ்தல் பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத் தில்லியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘பஞ்சாபில் தோ்தல் வியூகங்களை வகுப்பது தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் அமரீந்தா் சிங், சுக்தேவ் சிங் திண்ட்சா ஆகியோரும் கலந்து கொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக-பஞ்சாப் லோக் காங்கிரஸ்-எஸ்ஏடி (சம்யுக்த்) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு தொடா்பாக முடிவெடுக்க 3 கட்சிகளின் தலைவா்கள் அடங்கிய குழு அமைக்கப்படவுள்ளது. உரிய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.