தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தில்லி: இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

தில்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 டிசம்பர் 2021, 6:45 am

DIN

தில்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் தில்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து மத்திய பிரதேசம், குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், அசாம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 290 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,43,352 ஆக உயர்ந்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.