
புது தில்லி: தில்லியில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்துவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை புதிதாக 331 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்து. இதற்கு முன்பு, கடந்த ஜூன் 6ஆம் தேதிதான் இந்த அளவுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கூறியதாவது:
தில்லியில் கடந்த சில நாள்களாக தொற்று உறுதியாகும் விகிதம் 0.5 சதவீதமாக உள்ளதால், முதல்கட்டமாக மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்தப்படுகிறது. விரைவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
இதையும் படிக்க.. லக்கிம்பூர் கலவரம்: வன்மம் கடந்துள்ள பாதை!
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.