தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வேலை உருவாக்கத்தில் பட்ஜெட் முக்கியப் பங்காற்றும்: நட்டா

​மத்திய நிதிநிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் வேலை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும் என தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2021, 1:42 pm

DIN


மத்திய நிதிநிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் வேலை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும் என தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பாராட்டு தெரிவித்துள்ளார்.

2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

இதுபற்றி ஜெ.பி. நட்டார் கூறியது:

"இதுதான் முதல் டிஜிட்டல் நிதிநிலை அறிக்கை. இந்த நிதிநிலை அறிக்கை அனைவருக்குமானது. வயதானவர்கள், இளைஞர்கள், பெண்கள், அமைப்புமுறை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு மற்றும் பெரிய தொழில் நிறுவன அதிபர்கள் என அனைவரது எதிர்பார்ப்பையும் விருப்பத்தையும் இந்த நிதிநிலை அறிக்கை பூர்த்தி செய்யும்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகள்.

நிதிநிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் நாட்டில் வேலை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும்." என்றார் நட்டா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.