தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மும்பையில் முகக்கவசம் அணியாத 512 ரயில் பயணிகளுக்கு அபராதம்

மும்பையில் முகக்கவசம் அணியாத 512 ரயில் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

News image
கோப்புப்படம்
Updated On :2 பிப்ரவரி 2021, 6:04 am

DIN

மும்பையில் முகக்கவசம் அணியாத 512 ரயில் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

கரோனா பெருந்தொற்று குறைந்த நிலையில் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் ரயில் பயணத்தில் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து ரயில்வேயின் மும்பை பிரிவு, பிரஹன் மும்பை மாநகராட்சி இணைந்து  முகக்கவசம்அணியாததற்காக 512 ரயில் பயணிகளுக்கு அபராதம் விதித்துள்ளது.  அவர்களிடம் தலா ரூ. 200 வசூலிக்கப்பட்டது. 

இதற்கிடையில், மேற்கு ரயில்வே பிரிவும் 237 பயணிகளுக்கு முகக்கவசம் அணியாததற்காக அபராதம் விதித்துள்ளது.

பல மாதங்களுக்குப் பிறகு மும்பையில் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகின்றனர். மும்பையில் திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி புதிதாக 328 பேர் உள்பட இதுவரை 3,09,297 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

அதேநேரத்தில் 2,91,373 பேர் குணமடைந்துள்ளனர். 5,656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 11,359 ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.