வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லி வன்முறை: கைதான 115 பேரின் பட்டியல் வெளியீடு

தில்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :3 பிப்ரவரி 2021, 7:54 am

DIN


தில்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

குடியரசு நாளன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக விவசாயிகளை தில்லி காவல்துறையினர் கைது செய்து தில்லி நகரின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (பிப்.3) வெளியிட்டுள்ளார். 

டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள், காணாமல் போனதாக குடும்பத்தினர் தேடுவார்கள் என்பதால் தில்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.