இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,831 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,831 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,08,38,194-ஆக அதிகரித்தது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 11,904 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,05,34,505-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றுக்கு மேலும் 84 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,55,080-ஆக அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு தினசரி உயிரிழப்பு மீண்டும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 1,48,609 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 20.19 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், நேற்று மட்டும் 5,32,236 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் இதுவரை 58 லட்சத்துக்கும் அதிகமானவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் குண்டுவெடிப்பு! 2 குழந்தைகள் கொலை!
ஐசிசி மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், பும்ரா!

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


