சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மத்திய பாஜக அரசுக்கு தொழிலதிபர்கள்தான் கடவுள்: ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு தொழிலதிபர்கள்தான் கடவுள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :8 பிப்ரவரி 2021, 6:20 am

DIN

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு தொழிலதிபர்கள்தான் கடவுள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய பட்ஜெட்டில் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுகிறது. இளைஞர்கள், விவசாயிகள் நலன் ஆகிய இரண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

மோடி அரசுக்கு உள்ள மூன்று - நான்கு தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே அவர்களுக்கு கடவுளாகத் தெரிகின்றனர் என்று பதிவிட்டுள்ளார். 

இதேபோன்று 'மத்திய பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'பிரதமர்' என்ற வார்த்தையை ஆறு முறையும், 'கார்ப்பரேட்டுகள்/ நிறுவனங்கள்' என்ற வார்த்தையை 17 முறை பயன்படுத்தியுள்ளார். ஆனால், நாட்டின் பாதுகாப்பு(Defence) மற்றும் 'சீனா' (china) என்ற வார்த்தையை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை' என்று ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக 2021-22 ஆம் ஆண்டுக்கான  மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.