ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கரோனா பலி எண்ணிக்கை விகிதத்தில் குறைவு: மத்திய சுகாதாரத் துறை

​நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களில் 71 சதவிகிதம் பேர் கேரளம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 பிப்ரவரி 2021, 12:26 pm


நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களில் 71 சதவிகிதம் பேர் கேரளம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷண் கூறியது:

"கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 35,000-க்கும் மேல் உள்ளது. மொத்தம் சிகிச்சை பெற்று வருபவர்களில் இந்த 2 மாநிலங்களில் மட்டும் 71 சதவிகிதம் அடங்குவர். கேரளத்தில் 65,670 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், மகாராஷ்டிரத்தில் 35,991 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,000-க்கும் குறைவாகவே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மொத்த கரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருவோர் விகிதம் வெறும் 3.12 சதவிகிதம்தான். மொத்தம் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. மேலும் குறைந்து வருகிறது. 

15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பலி பதிவாகவில்லை. 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 3 வாரங்களாக கரோனா பலி பதிவாகவில்லை. கடந்த 5 வாரங்களில் சராசரி கரோனா பலி எண்ணிக்கை விகிதம் 55 சதவிகிதம் குறைந்துள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.