மேற்கு வங்கத்தில் 12 மணிநேர முழு அடைப்பு

மேற்கு வங்கத்தில் காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டித்து 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் 12 மணிநேர முழு அடைப்பு

மேற்கு வங்கத்தில் காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டித்து 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை உருவாக்கக்கோரியும், மாநிலத்தில் தொழிற்பேட்டைகளை நிறுவக் கோரியும் நபானா பகுதியில் இளைஞர்கள் காங்கிரஸார் மற்றும் இடதுசாரி கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பேரணியாகச் சென்றனர்.

தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற இளைஞர்களை இரும்பு தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்தனர்.

தடுப்புகளை மீறி இளைஞர்கள் செல்ல முயன்றபோது காவல்துறையினர் தண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். காவல்துறையினர் தடியடி நடத்தியதில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியின் பொதுச்செயலாலர் பீமன் போஸ், 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். காவல்துறையின் நடவடிக்கை வரலாற்று கறையான ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவுபடுத்துவதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com