தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உத்தரகண்ட்: குறைந்த வீரர்களுடன் தொடரும் மீட்புப் பணி

உத்தரகண்ட் மாநிலம் சமோலி பகுதியில் நேரிட்ட விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

News image
உத்தரகண்ட்: குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் மீட்புப் பணி
Updated On :12 பிப்ரவரி 2021, 5:15 am

DIN


உத்தரகண்ட் மாநிலம் சமோலி பகுதியில் நேரிட்ட விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரிஷிகங்கா நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்ததால், நேற்று மீட்புப் பணிகள் சற்றுநேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சமோலியில் பனிப்பாறை வெடித்த விபத்துக்குள்ளான பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.7) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.