’விவசாயம் தொழிலதிபர்களுக்கு சொந்தமானதல்ல’: ராகுல் விமர்சனம்
விவசாயம் என்பது தேசத்திற்கானது, தொழிலதிபர்களுக்கானதல்ல என்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


விவசாயம் என்பது தேசத்திற்கானது, தொழிலதிபர்களுக்கானதல்ல என்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அஜ்மீரில் நடைபெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் மத்திய அரசை விமர்சித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “வேளாண் சட்டங்களை அமல்படுத்தினால் நாட்டில் வேலையின்மை அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார். மேலும், “பிரதமர் விவசாயிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதாக தெரிவிக்கிறார். ஆனால் அவர் பட்டினி, வேலையின்மை மற்றும் தற்கொலைகளைத் தான் அவர் வழங்கியிருக்கிறார்” என்றார்.
மேலும்,“விவசாயம் என்பது பாரத தேசத்திற்கானது, தொழிலதிபர்களுக்கானதல்ல” எனத் தெரிவித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...