சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

'மக்களிடம் கொள்ளை' - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி!

சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :15 பிப்ரவரி 2021, 8:16 am

DIN

சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சிலிண்டர் விலை உயர்வு குறித்த செய்திகளை டேக் செய்து, 'இரண்டு பேரின் வளர்ச்சிக்காக பொதுமக்களிடமிருந்து பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார். 

வேளாண் சட்டங்கள், பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

தில்லியில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .50 அதிகரித்து 14.2 கிலோகிராம் சிலிண்டர் ரூ .769 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.735-லிருந்து ரூ.785 ஆக உயர்ந்தது.

கடந்த 4-ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.25 உயா்த்தப்பட்ட நிலையில், விலை உயர்வு இம்மாதத்தில் இது இரண்டாவது முறை ஆகும். இதனால் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் ரூ. 75 உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.