விவசாயிகள் ரயில் மறியல்: களமிறங்கிய விவசாயப் பெண்கள்

நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், பல்வேறு இடங்களில் பெண்கள் குழுவாக கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியல் போராட்டத்தில் விவசாய பெண்கள்
ரயில் மறியல் போராட்டத்தில் விவசாய பெண்கள்

நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், பல்வேறு இடங்களில் பெண்கள் குழுவாக கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹரியாணா மாநிலத்தின் ஜிந்த் பகுதி ரயில் நிலையத்தில் பெண்கள் தண்டவாளத்தில் சூழ்ந்து ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோனிபட் பகுதியில் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா விவசாய சங்கம் சார்பில் பெண்கள் கைகளில் தேசியக் கொடியினை ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


 
இதேபோன்று பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து ஏராளமான பெண்கள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரகண்ட் மாநிலம் ராஞ்சி பகுதி ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண்கள் ரயில் தண்டவாளத்தில் பேரணி மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல்வேறு மாநிலங்களில் நண்பகல் 12 மணி முதல் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் ஒரு சில பகுதிகளில் முக்கிய ரயில்கள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com