ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பெட்ரோல் விலை உயர்வை கேள்வி கேட்டால் தேச துரோகியா? சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்

பெட்ரோல் விலை உயர்வைக் கேள்வி எழுப்புபவர்கள் மீது தேச துரோக பட்டம் சுமத்துவதா என சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத் (கோப்புப்படம்)
Updated On :18 பிப்ரவரி 2021, 10:20 am

DIN

பெட்ரோல் விலை உயர்வைக் கேள்வி எழுப்புபவர்கள் மீது தேச துரோக பட்டம் சுமத்துவதா என சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான சஞ்சய் ரெளத், “பெட்ரோல் விலை உயர்வின் மூலம் எங்கே போகிறது? மேற்கு வங்க பிரசாரத்திற்கு செல்கிறதா? எரிபொருள் விலை உயர்வுக்கு முந்தைய அரசே பொறுப்பு என மத்திய அரசு மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறது” என்றார்.

தொடர்ந்து, “7 ஆண்டுகளாக முழு பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பணவீக்கம், ஊழல், தேசிய பாதுகாப்பு தொடர்பான உள்ளிட்ட எந்தவொரு கேள்வியை எழுப்பினாலும் இதே பதிலைத் தான் மத்திய அரசு தெரிவிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்புபவர்களை தேச துரோகிகளாக சித்தரிப்பதா? என சஞ்சய் ரெளத் விமர்சனம் எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.