/

பல்வேறு இடங்களில் எரிபொருள் விலையுயர்வைக் கண்டித்து போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலையுயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:33 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள் விலையுயர்வைக் கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வந்தாலும், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.

Story image

இதனிடையே எரிபொருள் விலையுயர்வைக் குறைக்க வலியுறுத்தி  மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.

Story image

ஜம்மு-காஷ்மீரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் விளையாடுவது போன்று முகமூடி அணிந்துகொண்டு, கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் பெண்கள் கைகளில் சமையல் எரிவாயு சிலிண்டரை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு  மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.