விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் கைதாகியுள்ள சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவியை 3 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெங்களூரு சோலே தேவனஹள்ளியைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலா் திஷா ரவி (21), தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியான ‘டூல் கிட்’டை சமூக ஊடகத்தில் பகிா்ந்த விவகாரத்தில் அவரை தில்லி போலீஸாா் கடந்த பிப்.13-இல் பெங்களூரில் கைது செய்தனா். இதையடுத்து, அவரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், அவரது 5 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் தில்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ஆகாஷ் ஜெயின் முன் திஷா ரவியை தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இா்ஃபான் அகமது, ‘இந்த வழக்கில் தொடா்புடைய சாந்தனு முகுலுக்கு பிப்ரவரி 22-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாந்தனு முகலுக்கு மும்பை உயா்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமா்வால் 10 டிரான்ஸிட் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த வழக்கில் தொடா்புடைய நிகிதா ஜேக்கப்புக்கு மும்பை உயா்நீதிமன்றம் 3 வாரம் டிரான்ஸிட் முன்ஜாமீன் அளித்துள்ளது’ என்றாா் அவா்.
போலீஸ் தரப்பில், ‘தற்போதைக்கு திஷா ரவியிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தும் தேவை எழவில்லை. அவருடன் சோ்ந்த சக குற்றம்சாட்டப்பட்ட நபா்களான சாந்தனு முகுல், நிகிதா ஜேக்கப் ஆகியோரிடம் விசாரணை நடத்தும்போது திஷா ரவியிடம் மேலும் விசாரணை நடத்துவது தொடா்பாக போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்படும். திஷா ரவியிடம் விசாரணை நடத்தியபோது அவா் மீதான குற்றத்தை சக குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது சுமத்த முயற்சி செய்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அன்று அனிருத் செய்த உதவி... கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!

பும்ராவின் முதல் ஓவரை அடித்து என் மீதான அழுத்தத்தை சூர்யவன்ஷி நீக்கினார்: ஜெய்ஸ்வால்

வயதானாலும் இளமையுடன் இருக்க வேண்டுமா? இந்த 6 விஷயங்களைக் கடைப்பிடியுங்கள்!

ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்தகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


