அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பெட்ரோல் விலையேற்றம்: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

News image

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

Updated On :21 பிப்ரவரி 2021, 12:12 pm

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையுயர்வால் எல்லா பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு எரிபொருள் விலையுயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக ரூ.21 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது கொடூரமானது எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படும் நிலையில், நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. 

இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை, அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.