மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஒடிசாவில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: காரணம் என்ன?

ஒடிசாவின் கார்ல்பட் வனவிலங்கு சரணாலயத்தில் 6 யானைகள் பலியானதற்கு பாக்டீரியா தொற்றே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

News image

ஒடிசாவில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: காரணம் என்ன?

Updated On :25 பிப்ரவரி 2021, 10:52 am

ஒடிசாவின் கார்ல்பட் வனவிலங்கு சரணாலயத்தில் 6 யானைகள் பலியானதற்கு பாக்டீரியா தொற்றே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கலஹந்தியில் உள்ளது கார்ல்பட் வனவிலங்கு சரணாலயம். சுமார் 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் யானை, சிறுத்தை, மான், இந்திய ஓநாய், காட்டு நாய், காட்டு பன்றி, சோம்பல் கரடி, மலபார் அணில் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் இந்த சரணாலயத்தில் கடந்த 15 நாள்களில் 6 யானைகள் பலியாகி இருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநில முதல்வர் நவீன் பட்நாயக் யானைகள் இறப்பு குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் யானைகளின் பிரேத பரிசோதனையின் முடிவில் யானைகளுக்கு பாக்டீரியா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பாக்டீரியா தொற்று காரணமாக யானைகள் பலியாகி இருக்கலாம் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.