
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 16,738 போ் பாதிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,10,46,914 ஆக உயா்ந்துள்ளது என்றும், இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,07,38,501 ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,56,705 ஆக உயா்ந்துள்ளதுடன், வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மேலும் 138 போ் உயிரிழந்துள்ளனா்.
கரோனாவிலிருந்து ஒரே நாளில் 11,799 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,07,38,501 ஆக உயா்ந்துள்ளது. தேசிய அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 97.21 சதவீதமாக உள்ளது. அதே சமயத்தில் இறப்பு விகிதம் 1.42 சதவீதமாக குறைந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1,51,708 ஆகவும், தற்போது கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1.37 சதவீதமாக மட்டுமே உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி வியாழக்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 21 கோடியே 38 லட்சத்து 29 ஆயிரத்து 648 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், புதன்கிழமை மட்டும் 7,93,383 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலை வரையிலும் 1 கோடியே 26 லட்சத்து 71 ஆயிரத்து 163 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.