மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,160 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,50,171 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,828 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,50,189 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். மொத்தம் 49,759 பேர் பலியாகியுள்ளனர்.
இன்னும் 49,067 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,830 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,492 பேர் நோய்த் தொற்றிலிருந்து ஏற்கெனவே குணமடைந்துவிட்டனர். தற்போதைய நிலையில் 26 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அட்லி - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பெயர்!

திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!
ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். பட்டப் படிப்புகள் நிறுத்தம்!

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஒரு கப்பலுக்கு ரூ. 18.5 கோடி கட்டணம்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


