

தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்குபெற இந்தியா வருகை தரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணத்திட்டத்தில் மாற்றமில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியக் குடியரசுத் தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன், பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு போரிஸ் ஜான்சன் கடிதமும் எழுதினார்.
இந்நிலையில் பிரிட்டனில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பிப்ரவரி மத்தியில் வரை அந்நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகையில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 2-ஆவது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆவார். இதற்கு முன்னர் 1993-இல் அப்போதைய பிரதமர் ஜான் மேஜர் குடியரசு தின விழாவில் பங்கேற்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு ஜான்சன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.