பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பறவைக் காய்ச்சல்: மாவட்ட நிர்வாகங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல்

கர்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு துணை முதல்வர் லஷ்மன் சவாடி அறிவுறுத்தியுள்ளார்.

News image
கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல்: மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்
Updated On :7 ஜனவரி 2021, 10:15 am

DIN


கர்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு துணை முதல்வர் லஷ்மன் சவாடி அறிவுறுத்தியுள்ளார்.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டு வரும் நிலையில், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு, தில்லியில் கண்காணிப்பு மையம் ஒன்றையும் அமைத்துள்ளது.

இதனிடையே அண்டை மாநிலமான கேரளத்தில் பறவைக் காய்ச்சலால் 62 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனால் கேரளத்திலிருந்து கோழி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு துணை முதல்வர் லஷ்மன் சவாடி அறிவுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள தக்‌ஷன கன்னடா, குடகு, மைசூரு ஆகிய மாவட்டங்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.