புது தில்லி: நாட்டில் புதிதாக பரவி வரும் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஜனவரி 6-ஆம் தேதி வரை புதிய வகை கரோனா பாதிப்பு 73 ஆக இருந்த நிலையில் தற்போது இது 82 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒன்பது பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 82 ஆக அதிகரித்துள்ளது.
புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா, இந்தியாவைப் போன்றே டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபானக் கொள்கை வழக்கில் ஆஜராகமாட்டேன்: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிக்கு கேஜரிவால் கடிதம்
தில்லியில் வெப்ப அலை செயல் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த துணைநிலை ஆளுநா் உத்தரவு
தில்லியில் விவசாய வயலில் தீ விபத்து
ரோஹிணியில் உணவு விநியோக ஊழியா் சுட்டுக்கொலை: தலைமைக் காவலா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


