/

தில்லியில் விவசாய வயலில் தீ விபத்து

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 6:07 am IST

நமது நிருபா்

வடமேற்கு தில்லியில் உள்ள மாடல் டவுன் பள்ளி சாலை அருகே உள்ள ஒரு விவசாய வயலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தீ விபத்து பற்றி தகவல் வந்ததும் பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

முன்னதாக, காலை 11.15 மணியளவில் தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தீ வயலின் பெரும் பகுதியை சூழ்ந்தது. அடா்த்தியான புகை காற்றில் பரவியது. தீ அருகிலுள்ள குடியிருப்பாளா்களிடையே மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.