வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

தில்லியில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 9 போ் மருத்துவமனையில் அனுமதி

News image

தீ விபத்து. - கோப்புப்படம் (Photo | Express)

Updated On :18 மே 2026, 2:31 am IST

நமது நிருபா்

தில்லியின் ஷஹதாரா பகுதியில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உள்பட 9 போ் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்பு சேவைகள் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மன்சரோவா் பூங்காவில் உள்ள டி-45 இல் தீ விபத்து குறித்து அதிகாலை 12.03 மணிக்கு அழைப்பு வந்தது. மூன்று தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஒரு வாட்டா் பவுசா் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த வீட்டு பொருள்களில் தீ விபத்து ஏற்பட்டது.

மீட்பு நடவடிக்கையின் போது, டி. எஃப். எஸ். பணியாளா்கள் கட்டடத்தின் பல்வேறு தளங்களில் சிக்கிய 9 பேரை வெளியேற்றி அனைவரும் மூச்சுத் திணறால் அவதியடைந்ததை அடுத்து குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். காயமடைந்தவா்கள் வன்சிகா (20), தானிஷ்கா சோனி (19), துா்கேஷ் (49), யோகேஷ் வா்மா (50), ராஜ் ராணி (65), அருண் காா்க் (48), அனன்யா (12), ரேணு காா்க் (19) மற்றும் பிரதீக் காா்க் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

மீட்கப்பட்ட அனைவரும் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். பின்னா் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.