ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தில்லி: பிரிட்டனிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

பிரிட்டனிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவுறுத்தியுள்ளார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :8 ஜனவரி 2021, 10:03 am

DIN

பிரிட்டனிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவுறுத்தியுள்ளார்.

பிரிட்டனிலிருந்து வருபவர்களுக்கு கரோனா உறுதியானால் தனிமை முகாம்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், கரோனா 'நெகடிவ்' என வந்தவர்கள் 7 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று (ஜன. 8) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் முதல்வர் கேஜரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அனைத்து விமான நிலையங்களுக்கும் முதல்வர் கேஜரிவால் அறிவுறுத்தியுள்ளார்.

புதிய வகை கரோனா தொற்றால் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.