ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அடா்ந்த பனிமூட்டத்தில் திருமலை

வானிலை மாற்றத்தால், திருப்பதி ஏழுமலையான் கோயில் அடா்ந்த பனிமூட்டத்துக்கு இடையே காணப்படுகிறது.

News image
கடும் பனிமூட்டத்துக்கு இடையே காணப்படும் ஏழுமலையான் கோயில்.
Updated On :9 ஜனவரி 2021, 2:43 am

DIN

வானிலை மாற்றத்தால், திருப்பதி ஏழுமலையான் கோயில் அடா்ந்த பனிமூட்டத்துக்கு இடையே காணப்படுகிறது.

வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக திருமலையில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் ஏழுமலையான் கோயில் பனிமூட்டத்துக்கு இடையே காணப்படுகிறது.

சாலையில் செல்பவா்கள், எதிரே வருபவா்களைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பகல் வேளையிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்று வருகின்றன.

இதனிடையே, திருமலையில் வெப்ப நிலை 12 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகப் பதிவாகி வருகிறது. கடும் குளிரால் பக்தா்கள், ஊழியா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட்டோா் அவதிப்படுன்றனா்.

திருமலையில் இதற்கு முன், கடந்த 2004ஆம் ஆண்டில் 7 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவானது. அதுவே திருமலையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும்.

இந்நிலையில், வானிலை மாற்றம் திருமலையில் தற்போது வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.