பறவைக் காய்ச்சல்: தில்லியில் 200 காகங்கள் இறந்தது குறித்து ஆய்வு

தில்லியில் உள்ள மத்திய உயிரியல் பூங்காவில் தொடர்ந்து காகங்கள் இறந்து வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல்: தில்லியில் 200 காகங்கள் இறந்தது குறித்து ஆய்வு (கோப்புப்படம்)
பறவைக் காய்ச்சல்: தில்லியில் 200 காகங்கள் இறந்தது குறித்து ஆய்வு (கோப்புப்படம்)
Updated on
1 min read

தில்லியில் உள்ள மத்திய உயிரியல் பூங்காவில் தொடர்ந்து காகங்கள் இறந்து வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தில்லி மயூர் விஹார் மத்திய பூங்காவில் மேலும் 17 காகங்கள் இறந்துள்ளன.

உயிரியல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 200 காகங்கள் வரை உயிரிழந்ததால், இறந்த காகங்களின் மாதிரிகள் ஜலந்தர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காகங்கள் பறவைக் காய்ச்சலால் இறந்தனவா அல்லது தில்லி குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக இறந்தனவா என்பது குறித்து ஆய்வு முடிவுகளில் கண்டறியப்படும். 

இதன் எதிரொலியாக உயிரியல் பூங்கா முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com