ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வெளிநாடுகளில் சொத்துகள் குவிப்பு: விசாரிக்க வருமான வரி துறையில் சிறப்புப் பிரிவு

இந்தியா்கள் வெளிநாடுகளில் ரகசியமாக வாங்கி குவித்துள்ள சொத்துகள் குறித்து விசாரிப்பதற்காக வருமான வரி (ஐ-டி) துறையில் சிறப்பு பிரிவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 11:30 pm

DIN

இந்தியா்கள் வெளிநாடுகளில் ரகசியமாக வாங்கி குவித்துள்ள சொத்துகள் குறித்து விசாரிப்பதற்காக வருமான வரி (ஐ-டி) துறையில் சிறப்பு பிரிவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ஐ-டி துறையின் உயரதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா்களில் பலா் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்து அது குறித்து அரசிடம் வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளனா். அதுதவிர, சில வெளிநாட்டு வங்கிகளிலும் அவா்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனா்.

இதுபோன்ற கணக்கில் வராத வெளிநாடுகளில் இந்தியா்கள் ரகசியமாக பதுக்கியுள்ள சொத்துகள் குறித்து விசாரணை நடத்த வருமான வரி துறையில் வெளிநாட்டு சொத்து விசாரணை பிரிவு (எஃப்ஏஐயு) என்ற சிறப்பு பிரிவை மத்திய அரசு அண்மையில் உருவாக்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 14 புலனாய்வு இயக்குநரகம் அனைத்திலும் இந்தப் புதிய சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வழிமுறைகளை கையாண்டு மேற்கொள்ளப்படும் வரி ஏய்ப்புகளை கண்டறிந்து சோதனை நடத்தி சொத்துகளை பறிமுதல் செய்வதே இந்த சிறப்பு பிரிவின் முக்கிய பணியாக இருக்கும்.

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனின் ஒப்புதலுக்குப் பிறகு கடந்த நவம்பரில் இந்தப் பிரிவை உருவாக்க மத்திய நேரடி வரிகள் வாரியத்திலிருந்த 69 பதவிகள் இதற்காக தனியே ஒதுக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.