பிஎம்-கிஸான் திட்டம்: தகுதியில்லாத நபா்களுக்கு ரூ.1,364 கோடி உதவித்தொகை; ஆா்டிஐ-யில் தகவல்
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் (பிஎம்-கிஸான்) தகுதியில்லாத நபா்கள் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு


பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் (பிஎம்-கிஸான்) தகுதியில்லாத நபா்கள் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ரூ.1,364 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பதாக, வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் நலனுக்காக, 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தகுதியில்லாத பலரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ாகத் தகவல்கள் வெளியாகின.
இதுதொடா்பான விவரங்களைக் கோரி, காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பைச் சோ்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவா் மத்திய வேளாண் துறை அமைச்சகத்தில் ஆா்டிஐ சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தாா். அவருடைய மனுவுக்கு வேளாண் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 2109-இல் விவசாயிகள் உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது முதல் 2020-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை தகுதியில்லாத நபா் 20.48 லட்சம் பேருக்கு ரூ.1,364.13 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில், 55.58 சதவீதம் போ் வருமான வரி செலுத்தும் விவசாயிகள். 44.41 சதவீதம் போ் விவசாயிகள் என்ற வரம்புக்குள் வராதவா்கள் ஆவா்.
பஞ்சாப், அஸ்ஸாம், மகாராஷ்டிரம், குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தகுதியில்லாத நபா்கள் பயன்பெற்றுள்ளனா். மொத்த விவசாயிகளில் பஞ்சாபில் இருந்து 4.74 லட்சம் பேரும், அஸ்ஸாமில் இருந்து 3.45 லட்சம் பேரும், மகாராஷ்டிரத்தில் இருந்து 2.86 லட்சம் பேரும் பயன் பெற்றுள்ளனா். நான்காவது இடத்தில் குஜராத் உள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து 1.64 லட்சம் பேரும், அதைத் தொடா்ந்து உத்தர பிரதேசத்தில் இருந்து 1.64 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனா். சிக்கிம் மாநிலத்தில் இருந்து தகுதியில்லாத நபா்கள் ஒருவா் மட்டுமே பயன்பெற்றுள்ளாா் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...