யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குடியரசு தின விழா பேரணியை பார்வையிட 12-ம் வகுப்பு மாணவிக்கு அழைப்பு

குடியரசு தின விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
குடியரசு தின விழா பேரணியைப் பார்வையிட 12-ம் வகுப்பு மாணவிக்கு அழைப்பு (கோப்புப்படம்)
Updated On :20 ஜனவரி 2021, 12:14 pm

DIN


குடியரசு தின விழாவில் பங்கேற்று பேரணியை பார்வையிட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடவும் அழைக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவி திவ்யாங்கி திரிபாதி 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 99.6 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

குடியரசு தினவிழாவில் பங்கேற்க அதிக அளவு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பிரதமர் மோடியுடன் அமர்ந்து பேரணியை பார்வையிடும் வாய்ப்பை மாணவி திவ்யாங்கி திரிபாதி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ''இந்த அழைப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைத்து ஊக்கப்படுத்துவது அரசின் மிகச்சிறந்த நடவடிக்கை. வெவ்வேறு சமூகத்திலிருந்து எந்தவேறுபாடுமின்றி அனைத்து வகையான மாணவர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. அரசின் இந்த அழைப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.