யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை: உ.பி. பள்ளி சுவரொட்டியால் கவலை

கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை என்று உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் பள்ளி வாயிலில் பதாகை கட்டி தொங்கவிட்டிருந்ததால் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சி

News image
கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை: உ.பி. பள்ளி சுவரொட்டியால் அதிர்ச்சி
Updated On :21 ஜனவரி 2021, 8:08 am

DIN


கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை என்று உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் பள்ளி வாயிலில் பதாகை கட்டி தொங்கவிட்டிருந்தது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் தனியார் பள்ளிகள் சங்கத்தை சேர்ந்த பள்ளிகளின் வாயிலில் இத்தகைய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர், கரோனா பொதுமுடக்கத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் பல பெற்றோர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை. ஆனால் மாணவர்களுக்கு இணையம் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. 

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். இதனால் கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வில் அனுமதி வழங்கப்படும் என்று பதாகைகளை வைத்துள்ளதாகக் கூறினார்.

தற்போது பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளதால், இறுதி தேர்வினை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.