திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மதம் சார்ந்த பேச்சுகளால் வன்முறையைத் தூண்டுகிறது பாஜக: திரிணமூல்

மதம் சார்ந்த பேச்சுகளால் மக்களிடையே பாஜக வன்முறையைத் தூண்டுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிர்ஹாத் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

News image
மதம் சார்ந்த பேச்சுக்களால் வன்முறையைத் தூண்டுகிறது பாஜக: திரிணமூல் காங்கிரஸ் (கோப்புப்படம்)
Updated On :21 ஜனவரி 2021, 6:42 am

DIN

மதம் சார்ந்த பேச்சுகளால் மக்களிடையே பாஜக வன்முறையைத் தூண்டுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிர்ஹாத் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இது தொடர்பாக பேசிய அவர், ''மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாக்கள் 10 சதவிகிதத்தினர் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.

இது தேர்தல் ஆணையத்தின் மீதான பாஜகவின் நேரடி தாக்குதல். மேற்கு வங்க மக்களிடையே பாஜக வெறுப்புணர்வை வளர்க்கிறது.

மதம் சார்ந்த பிரசார பேச்சுகள் மூலம் மக்களிடையே வன்முறையை பாஜக தூண்டுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். வெளிப்படையான மற்றும் அமைதியான தேர்தல் தான் நாங்கள் எதிர்பார்ப்பது. ஆனால் பிளவு உண்டாக்கி வாக்கிற்காக மக்களை அவர்கள் தீவிரவாதிகளாக மாற்றி வருகின்றனர்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.