சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கேரள சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக காங். தீர்மானம்

கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக கேரள எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

News image
கேரள சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக காங். தீர்மானம் (கோப்புப்படம்)
Updated On :21 ஜனவரி 2021, 5:43 am

DIN

கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக கேரள எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்மொழிந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படாது என்று இடது முன்னணி அரசு தெரிவித்துள்ளது.

கேரள சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இன்றைய (ஜன.21) பேரவைக் கூட்டத்தின்போது கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக முன்னணி தீர்மானம் முன்மொழிந்துள்ளது. தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரினர்.

இதனிடையே இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷர்மா, ஊடகங்களின் ஊகத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சற்று நேரம் பேரவையில் அமளி நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.