தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பின் முதல்வர் பதவி குறித்து முடிவு: பாஜக
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவி குறித்து முடிவு செய்யப்படும் என்று பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவி குறித்து முடிவு செய்யப்படும் என்று பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக பிரசாரப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
மாநில பாஜக நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையிலும், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் அவ்வபோது மேற்கு வங்கத்திற்கு வருகை புரிகின்றனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலுள்ள எம்.எல்.ஏ.க்களையும் பாஜக தனது கட்சிப்பக்கம் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடையே தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற பிறகே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், முதல்வர் வேட்பாளர் நிலைநிறுத்தி பிரசாரம் நடைபெறாது. தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற பிறகு கட்சித் தலைமை மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்து முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...