திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி: அரசுடனான பேச்சுக்கு பிறகு விவசாயிகள் அறிவிப்பு

திட்டமிட்டபடி ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி: அரசுடனான பேச்சுக்கு பிறகு விவசாயிகள் அறிவிப்பு
திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி: அரசுடனான பேச்சுக்கு பிறகு விவசாயிகள் அறிவிப்பு

திட்டமிட்டபடி ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசுடன் நடைபெற்ற 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து விஞ்ஞான் பவனிலிருந்து வெளியே வந்த விவசாயிகள் இதனைத் தெரிவித்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே 10 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இன்று 11-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

விஞ்ஞான் பவனில் சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பு தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த பாரதிய கிஷான் யூனியன் அமைப்பை சேர்ந்த ராகேஷ் திலக், பேச்சுவார்த்தையின்போது வேளாண் சட்டங்களில் திருத்தங்களை செய்துகொள்ளவும், இரண்டு ஆண்டுகள் வரை வேளாண் சட்டங்களை ஒத்திவைப்பதாகவும் கூறியது. ஆனால் அதனை நாங்கள் ஏற்கவில்லை. இந்த சலுகைகளை ஏற்றால் மட்டுமே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்ததாகவும் கூறினார்.

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

அமைச்சர் மூன்றரை மணிநேரம் காத்திருக்க வைத்து எங்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார் என்று கிஷான் மஸ்தூர் சங்கர்ஸ் கமிட்டியின் பந்தேர் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com