டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ம.பி.யில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.59-க்கு விற்பனை

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
ம.பி.யில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.59-க்கு விற்பனை
Updated On :27 ஜனவரி 2024, 7:21 pm

DIN

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. 

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில நாள்களாக பெரிதும் மாற்றமின்றி காணப்பட்ட பெட்ரோல், டீசல் விலை தற்போது படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டு விலைப்பட்டியலில் உச்சத்தை எட்டி வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.87.11-க்கு சனிக்கிழமை விற்பனையாகிறது. இதே போல், டீசல் விலையும் ரூ.79.48-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேசிய தலைநகா் தில்லியில் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.85.70-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.75.88-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று பெட்ரோல் விலை மும்பையில் ரூ.92.2-க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.82.66-க்கும் விற்பனையாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.