Intense cold wave in Kashmir
Intense cold wave in Kashmir

ஸ்ரீநகரில் கடுங்குளிர்: 5.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது

காஷ்மீரில் திங்கள்கிழமை ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக, பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

காஷ்மீரில் திங்கள்கிழமை ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக, பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஸ்ரீநகரில் மைனஸ் 5.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய தினம் இரவு மைனஸ் 1.9 டிகிரி செல்சியஸிலிருந்து குறைந்தது. பள்ளத்தாக்கின் நுழைவாயில் நகரமான காசிகுண்ட் குறைந்தபட்சம் மைனஸ் 5.5 டிகிரி செல்சியஸாக பதிவானது. 

காஷ்மீரின் பெரும்பாலானா பகுதியில் கடுங்குளிர் வாட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளிவரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

வடக்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 11.5 டிகிரி செல்சியஸாக குறைந்தது. பஹஸ்காமில் மைனஸ் 11.9 டிகிரி செல்சியஸாகவும், குப்வாராவில் மைனஸ் 3.1 டிகிரியாகவும், கோகெர்னாக் மைனஸ் 8.4 டிகிரியாகவும் பதிவானது. 

தெற்கு காஷ்மீர், தற்போது சில்லய்-கலான் என்னும் 40 நாள்கள் நீடிக்கும் ஒரு குளிர் அலையின் பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்றதால் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளும் உறைந்து காணப்படுகின்றன. டிசம்பர் 21-ஆம் தேதி தொடங்கிய இந்த சில்லய்-கலான் ஜனவரி 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com