பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு மூடப்படுகிறது

குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வந்த கரோனா வார்டு மூடப்படுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 15 முதல் பொது வார்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News image

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு மூடப்படுகிறது

Updated On :29 ஜனவரி 2021, 10:46 am


சென்னை: குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வந்த கரோனா வார்டு மூடப்படுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 15 முதல் பொது வார்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது. இதையடுத்து, கரோனா வார்டு மூடப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணிகள் முடிந்து பொது வார்டு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 1-ம் தேதி முதல் கரோனா வார்டு மூடப்படுகிறது. ஒட்டுமொத்த மருத்துவமனையும் தூய்மைப்படுத்தப்பட்டு, பிறகு பொது வார்டு திறக்கப்படும். இதற்கு ஒரு சில வாரங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு கரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தற்போது இந்த மருத்துவமனையில் ஒரேயொரு கரோனா நோயாளி மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, கரோனா வார்டை மூடிவிட்டு, பொது வார்டைத் திறக்குமாறு பொதுமக்கள் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பேரிடர் தொடங்குவதற்கு முன்பு, புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் அமைந்துள்ள இந்த அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் 1,500 புறநோயாளிகள் வந்து செல்வது வழக்கம், இங்கு 189 படுக்கை வசதிகளுடன் கூடிய பொது வார்டு செயல்பட்டு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.